search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேன்கனிக்கோட்டை விபத்து"

    தேன்கனிக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் டாக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி சாலையை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் மஞ்சுநாத் (வயது 22). டாக்டர். தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்ற இருந்தார். இவரும், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த பரத் (21), பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேதாந்து (21), பைபாஸ் சாலையை சேர்ந்த கோகுல் (22) ஆகிய 4 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் காரில் பெங்களூருவுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் அவர்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தேன்கனிக்கோட்டை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை கோகுல் ஓட்டி வந்துள்ளார்.

    தேன்கனிக்கோட்டை தண்டரை அருகே கார் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பரத் மற்றும் டாக்டர் மஞ்சுநாத் இருவரும் பரிதாபமாக இறந்தனர். கோகுல், வேதாந்து ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் வரதரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது28).

    இவர் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் பஞ்சேஸ்வரம் கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் பேளூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது இருசக்கர வாகனமும், பஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிவராஜ் என்பவரின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற சிவராஜ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சிவராஜ் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×